|அப்போ சிவகார்த்திகேயன்… இப்போ அல்லு அர்ஜூன்..!

Published On:

| By Balaji

நடித்தால் ஹீரோ மட்டும் தான் என்றில்லாமல், திரையில் புதுமைக்காட்டும் நவீன நடிகராக வலம் வருகிறார் ஃபகத் ஃபாசில். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான டிரான்ஸ் மற்றும் C U Soon எனும் இரண்டு படங்களுமே மலையாளத்தைத் தாண்டி இந்தியளவில் வரவேற்பைப் பெற்றது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஃபகத் ஃபாசில். பொதுவாக, மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பிரகாசிக்கும் ஹீரோக்கள் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் மார்கெட்டிலும் பெரிய இடத்தைப் பிடிக்க விரும்புவார்கள்.. துல்கர்சல்மான், மகேஷ்பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.. ஆனால், அப்படியில்லாமல், நல்ல ரோல் மட்டுமே தேடி நடிப்பவர் ஃபகத். அதனால், வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்தார்.

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தவர், அடுத்த கட்டமாகத் தெலுங்கு சினிமாவுக்குச் செல்கிறார். சுகுமார் இயக்கத்தில் அல்லுஅர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புஷ்பா’. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அல்லுஅர்ஜூனுக்கு வில்லனாக நடிக்கிறார் ஃபகத் ஃபாசில். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Welcoming #FahadhFaasil on board for the biggest face-off ????@alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @PushpaMovie #VillainOfPushpa #Pushpa

పుష్ప പുഷ്പ புஷ்பா ಪುಷ್ಪ पुष्पा pic.twitter.com/ndweB09rXi

— Mythri Movie Makers (@MythriOfficial) March 21, 2021

தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துவருகிறார். அல்லுவுக்கு அலவைகுண்டப்புரமுலோ படம் பெரிய ஹிட்டென்பதால், புஷ்பா படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

– ஆதினி

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share