நடிகர் சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
‘மாநாடு’ பட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கெளதம் மேனனின் ’வெந்து தணிந்தது காடு’, கிருஷ்ண குமார் இயக்கத்தில் ‘பத்து தல’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் ‘பத்து தல’ படத்திற்காக சிறிது உடல் எடை கூட்டி நடித்து வருவதாக பிக்பாஸ் அல்டிமேட் மேடையில் நடிகர் சிம்பு தெரிவித்தார் .
இந்நிலையில், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
‘விண்ணைத் தாண்டி வருவாயா?’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்கு பிறகு சிம்பு- கெளதம் மேனன் இணையும் கூட்டணி என்பதால் படம் குறித்தான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு திரைக்கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு தாமரை பாடல் வரிகளை எழுதி உள்ளார். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 22ம் தேதி படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பை முடித்து விட்டு ‘பத்து தல’ ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் சிம்பு,.
**ஆதிரா**