Bசிம்புவுக்கு என்ன ஆச்சு?

Published On:

| By Balaji

நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் தனது அடுத்த இன்னிங்சை தொடங்கிவிட்டார் என அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சிலம்பரசன் நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிலம்பரசன் கூட்டணி 3ஆவது முறையாக இந்த படத்தில் இணைந்திருப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் காய்ச்சல் காரணமாக, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நடிகர் சிலம்பரசன் அவரது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் , மருத்துவமனையிலிருந்து நான் வீடு திரும்பி விட்டேன் . தற்போது மெல்லக் குணமடைந்து வருகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் .

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share