Vநியூ சிம்புவின் அடுத்த லைன் அப்!

Published On:

| By Balaji

சிம்புவுக்கு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படங்கள் கைவசம் இருக்கிறது. இவ்விரு படங்களைத் தொடர்ந்து, சிம்புவின் அடுத்த லைன் அப் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது, சிம்பு நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பாகும். என்ன படமென்றால், மாநாடுக்கு முன்பு சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவான படம். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் அது.

இந்தப் படத்தில் நிழல் உலக தாதாவாக சிம்புவும், போலீஸ் அதிகாரியாக கெளதம் கார்த்திக்கும் நடித்திருக்கிறார்கள். கன்னடத்தில் இயக்கிய நார்தன் தமிழிலும் இயக்கிவந்தார். படத்தின்பாதிப் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது. சுடும் வெயில், கொட்டும் மழை என எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை நடத்தி வருவதாக கெளதம் கார்த்திக் படப்பிடிப்பின் போது ட்விட் செய்தார். அதற்கு அடுத்த சில தினங்களில், கர்நாடகாவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்திலிருந்து சொல்லிக்கொள்ளாமல் சிம்பு கிளம்பிவிட்டார். அதற்குப் பிறகு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கவே இல்லை. படமும் ட்ராப் என்று பேசப்பட்டது.

இப்போது சிம்பு மாறிவிட்டார். எல்லாமும் மாறிவிட்டது. நியூ சிம்புவாக அவதாரம் எடுத்திருப்பதால், சமீபத்தில் முஃப்டி படத்தை துவங்குவது குறித்து அவரே பேசினார். அதன்படி, முஃப்டி படம் துவங்குகிறது. மகிழ்மதியே உயிர் கொள் என்பது போல, முஃப்டி படத்தை கிக் ஸ்டார்ட் செய்வதால், நாளை படத்தின் டைட்டிலை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்கள்.

அதோடு, இந்தப் படத்தில் ஒரு பெரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. படத்தின் இயக்குநரை மாற்றியிருக்கிறார்கள். சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா தான் படத்தை இயக்க இருக்கிறார். இந்த மாற்றத்தை அறிவிக்கவும் இருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு எப்படியும் பிப்ரவரிக்குப் பிறகு துவங்கும் என்று தெரிகிறது. அதோடு, ஒரு வருடத்துக்கு முன்பு சிம்பு உடல் எடை அதிகமாக இருந்தார். இப்போது செம ஃபிட் சிம்புவாக மாறிவிட்டார். மீதி படப்பிடிப்பை எப்படி மேட்ச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share