சமீபகாலமாக திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவருகிறார் சிம்பு. அதாவது, கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை மாற்றி ஸ்லிம் ஃபிட் சிம்புவாக மாறினார். சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சிம்புவின் படம் எந்த சிக்கலுமின்றி வெளியாகிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் வெளியானதைத் தொடர்ந்து, இந்த வருடத்தின் அடுத்த ரிலீஸ் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் இசையில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகிவருகிறது மாநாடு. அரசியல் சார்ந்த கதைக்களமாக ஒரே நாளில் நடப்பது போன்று படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டார் சிம்பு. அடுத்தப் படத்தைத் துவங்குவதற்கு நடுவே ஓய்வில் இருக்கிறார். வீட்டில் இருக்கும் நேரத்தில், அவருக்குப் பிடித்த உணவுகளை அவரே ஆசையுடன் சமைத்து சாப்பிட்டு வருகிறாராம். சிம்பு சமைக்கும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி டிரெண்டாகும். அப்படி, தற்பொழுதும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தில் அடர்ந்த தாடியுடன் இருந்தார். பின்னர், மாநாடு ஷுட்டிங்கிற்காக ட்ரிம் செய்த தாடியுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தற்பொழுது, புதிய லுக்கிற்கு மாறியிருக்கிறார். க்ளீன் ஷேவ்வாக சிம்பு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சொல்லப் போனால், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த க்ளீன் ஷேவ் லுக்கிற்கு மாறியிருக்கிறார் சிம்பு.
Simbu Cooking Video with New Look ???? #STR #SilambarasanTR pic.twitter.com/TfoYzYAAjf
— InandoutLifestyle (@InandoutLifest1) July 2, 2021
அடுத்ததாக, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. கன்னடத்தில் வெளியான முஃப்டி படத்தின் ரீமேக். இந்தப் படத்தில் தாதா-வாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தாடியுடனான கெட்டப்பில் வருவார் என்று சொல்லப்பட்டது. ஆக, கொஞ்ச நாள் இந்த க்ளீன் ஷேவ், மீண்டும் தாடி வளர்க்கப் போகிறாராம் சிம்பு.
**- ஆதினி**
�,”