சிம்பு மற்றும் நயன்தாரா ஜோடி ரியல் வாழ்க்கையில் க்ளீன் போல்டு ஆனாலும், சினிமாவில் இந்த ஜோடி செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். ஏனெனில், இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஹிட்டாகியிருக்கிறது.
2006ல் சிம்பு, நயன்தாரா நடித்த வல்லவன் படம், 2016ல் இது நம்ம ஆளு படங்கள் வெளியானது. அதன்பிறகு இருவரும் இணைந்து எந்தப் படமும் நடிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என்று தெரிகிறது.
சிம்பு உடல் எடையைக் குறைத்தார், 30 நாளுக்குள் ஈஸ்வரன் படத்தை முடித்தார், நிவர் புயலுக்கும் அஞ்சாமல் மாநாடு கூட்டினார், அடுத்ததாக, பத்து தல நடிக்கிறார். இப்படி, சிம்பு எனும் நடிகன்… நியூ சிம்புவாக மாறியிருப்பதால், ஒவ்வொரு இயக்குநர்களும் சிம்புவை இயக்க போட்டிபோட்டு வருகிறார்கள். ஆனால், சிம்புவின் அடுத்த சாய்ஸாக இருப்பது இயக்குநர் ராம்.
இரண்டு கதைகளை சிம்புவுக்கு கூறியிருக்கிறார் ராம். சமூகப் பிரச்னையை சார்ந்த கதையும், பயணத்தை மையமாகக் கொண்ட கதையும் என்று சொல்லப்படுகிறது. இதில், டிராவல் ஸ்டோரியை டிக் செய்திருப்பதாக தெரிகிறது. அதில், படம் முழுக்க நாயகி கூடவே டிராவல் செய்வது போல படம் இருக்குமாம். அதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஏற்கெனவே இந்தக் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் நயன்தாரா. இப்போது சிம்புவும் சம்மதம் சொல்லிவிட்டார். ஆக, இருவரும் இணைந்து நடிப்பதற்கு மட்டும் ஒப்புக் கொண்டால் மட்டும் போதும், படம் துவங்கிவிடும் என்கிறார்கள்.
ராம் இயக்கத்தில் சிம்புவும், நயன்தாராவும் நடித்தால், இருவரும் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாக இருக்கும். சிம்புவுக்கு மாநாடு மற்றும் பத்து தல படங்கள் முடிக்க வேண்டியிருக்கிறது. நயனுக்கு அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் முடிக்க வேண்டியிருக்கிறது. இருவருமே அவர்களின் படங்களை முடித்துவிட்டு, இந்தப் படத்தில் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
**-ஆதினி**�,