என்னிடம் மறைக்க எதுவுமில்லை: சித்தார்த்

Published On:

| By Balaji

என்னிடம் மறைக்க எதுவுமில்லை, எனக்கு பயமுமில்லை என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் நடிகர்களில் முக்கியமானவர் சித்தார்த். மத்திய அரசின் செயல்பாடுகளையும், அரசியல், சினிமா என அனைத்து தளங்களிலும் தனது கருத்துகளையும், விமர்சனங்களையும் தயக்கம் இன்றி வெளியிட்டு வருபவர் சில நேரங்களில் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவுகளின் மூலம் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.

தற்போது தெலுங்கில்அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த், சர்வானந்த், அதிதிராவ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மகா சமுத்திரம். இந்தப் படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார் சித்தார்த்.

அதில் துணிச்சலாகக் கருத்துகள் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு சித்தார்த் பதில் கூறுகிற போது, “எனது 8 வயதிலிருந்தே நான் பொதுவெளியில் பேசி வருகிறேன். ‘விஸ்வரூபம்’ வெளியீடு சமயத்தில் கமல்ஹாசனுக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசினேன்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மனப்பான்மைக்கு எதிராக நான் என்றுமே எதிர்த்துப் பேசியிருக்கிறேன்.

நான், சரி என்று நினைக்கும் விஷயத்தைப் பேசுவதால் வெறுக்கப்படுவதே மேல் என்று நினைக்கிறேன். என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது. மறைக்க எதுவுமில்லை. எனக்கு பயமுமில்லை என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.

**-அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share