Rபடப்பிடிப்புகள் மே 31 வரை ரத்து!

entertainment

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பை நடத்தலாம் என நடிகர்களை அழைத்தால் கொரோனா முழுமையாக முடிவுக்கு வரட்டும் என்று முன்னணி நடிகர் நடிகைகள் மறுத்து விட்டனர். புதிய படங்களின் படப்பிடிப்பை தொடங்கலாம் என தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்தால் பைனான்சியர்கள் கடன் தரத் தயாராக இல்லை.

பணம் திரும்ப கிடைப்பதற்கான எந்த வழிவகையோ, உத்தரவாதமோ இங்கு இல்லை. இது தான் தமிழ்சினிமா தயாரிப்பு பிரிவின் உண்மை நிலை. தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் மட்டுமே எல்லா தரப்புக்கும் லாபகரமாக இருந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது.

இன்று முதல்(15.05.2021) மேலும் சில கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகத் திரைப்படம் மற்றும் சின்னதிரை படப்படிப்புகள் வரும் மே 31ஆம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக தென்னிந்தியத்திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று(15.05.2021) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சென்ற வாரம் முதலமைச்சரைச் சந்தித்தோம். சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். கொரோனோ நிவாரண நிதியுதவியாகக் கூடுதலாகத் திரைப்பட தொழிலாளர்களுக்கு 2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். சினிமா தொழிலாளர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *