4 மொழிகளில் வெளியாகும் நானி படம்!

Published On:

| By Balaji

தெலுங்கு நடிகரான நானி, நான் ஈ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தற்போது இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘ஷியாம் சிங்கா ராய்’. நாயகிகளாக சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர்.

ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா, அபினவ் கோமடம், ஜிஷு சென் குப்தா, லீலா சாம்சன், மணீஷ் வாத்வா, பருண் சந்தா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராகுல் சங்க்ரித்யன் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

நானி நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக செலவில் இப்படம் தயாராகி வருகிறது. இதுவரை சொல்லப்படாத ஒரு கதைக் களத்தை இந்த படத்தின் மூலம் கொண்டுவந்துள்ளதாக கூறுகிறார் இயக்குனர்.

அதனால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ல் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாகிறது.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share