‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சிவாங்கி கலந்து கொள்ளாதது பற்றி ரசிகர் ஒருவர் கேலி செய்ததற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடிந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த இரண்டு சீசன்களிலும் பங்கேற்ற அனைத்து கோமாளிகளும் இந்த சீசன் களிலும் இருக்கின்றனர்.
இந்த வாரம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிவாங்கி பங்கேற்க இயலவில்லை. இதை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நல்லவேளை இந்த வாரமும் சிவாங்கி இல்லை. நன்றி ப்ரோ’ என கேலி செய்யும் விதமாக புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இந்த ட்வீட்டை சிவாங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘இல்லாத என்னை பற்றி பேசுவதற்கு பதிலாக, நிகழ்ச்சியில் இந்த வாரம் பங்கெடுக்கும் கோமாளிகள் பற்றி பேசினால் இன்னும் சிறப்பாக இருக்குமே! அதை பற்றி யோசிக்கலாம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். சிவாங்கின் மிகவும் பாசிட்டிவான இந்த பதில்தான் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சிவாங்கி எப்பொழுதும் தன்னை நோக்கி வரும் வெறுப்பை மிகவும் பாசிட்டிவாக எதிர்கொள்கிறார். இதனாலேயே இன்னும் சிவாங்கியை ரசிகர்களுக்கு பிடித்துப் போகிறது. அவரது வயதை விட முதிர்ச்சியாகவே தன்னை நோக்கி வரும் வெறுப்புகளையும் பிரச்சினைகளையும் கையாள்கிறார் என்று இந்த பதிலடிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆதரவையும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
**ஆதிரா**