‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் வினுஷா தற்போது தன் நிறம் குறித்து மனம் திறந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. . இதில் நாயகியாக நடித்து வந்த ரோஷினி கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீரியலில் இருந்து விலகினார். அதன் பின்பு அந்த சீரியலின் நாயகியாக டிக்டாக் புகழ் வினுஷா நடித்து வருகிறார். அவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சீரியல் அனுபவம் குறித்தும் நிறத்தால் தான் சந்தித்தவை குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, முதலில் சீரியல், நடிப்பு, கேமரா என எது குறித்தும் எனக்கு தெரியாது. நடிப்பில் இதுதான் எனக்கு முதல் அனுபவம். இயக்குநர் பிரவீன், ‘அதெல்லாம் பயப்படாதீர்கள். பார்த்து கொள்ளலாம்’ என தைரியம் தந்தார். அதே போலதான், அருண் மற்ற நடிகர்கள் எல்லாரும் எனக்கு உதவினார்கள். இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறைய பேர் எனக்கு மெசேஜ் செய்தார்கள். மாநிறத்தால் நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறேன், நீங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றெல்லாம் இருக்கும். எனக்கும் என் நிறத்தால் நிறைய அவமானம் வந்திருக்கிறது. ஆனால் அது குறித்தெல்லாம் பெரிதாக கவலைப்படவில்லை.
ஆரம்பத்தில் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. சீரியல் எல்லாம் கொஞ்ச வருடம் கழித்து நடிக்கலாம் என்றிருந்தேன். சினிமாவுக்காக நிறைய ஆடிஷன்களுக்கு சென்றும் தேர்வாகவில்லை. அப்படி இருக்கும் போதுதான் சீரியல் வாய்ப்பு வந்தது. இதுவும் மகிழ்ச்சிதான்” என்று கூறியுள்ளார்.
**ஆதிரா**
�,”