‘மன்னித்துவிடுங்கள்’: சந்தானத்தின் சர்வர் சுந்தரம் இயக்குநர்!

entertainment

சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் திரைப்படம் மீண்டும் அறிவித்த தேதியில் வெளிவராததைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் ரசிகர்களிடம் மன்னிப்பு வேண்டியுள்ளார்.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சர்வர் சுந்தரம். சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி நடித்துள்ள இந்தப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. 2016-ஆம் ஆண்டே இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்னதாக படம் உருவாகி, பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளிவராமல் இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சர்வர் சுந்தரம் திரைப்படம் வரும் ஜனவரி 31-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதே நாளில் சந்தானம் கதாநாயகனாக நடித்த டகால்டி திரைப்படமும் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரே ஹீரோவின் இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது இரு திரைப்படங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அனைவரும் எச்சரித்து வந்தனர். தொடர்ந்து சர்வர் சுந்தரம் படக்குழுவின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், ‘சர்வர் சுந்தரம் திரைப்படத்தை தயாரித்துவிட்டோம். ஆனால் எதிர்நீச்சலை எதிர்கொள்வது போலத் தோன்றுகிறது. நாங்கள் வழிவிடுகிறோம். வாருங்கள் 31-ஆம் தேதி. டகால்டி படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ என்று தெரிவித்து, சர்வர் சுந்தரம் காதலர் தினத்தன்று ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி அந்த நாளிலும் திரைப்படம் வெளிவரவில்லை. இதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக படத்தின் இயக்குநர் ஆனந்த் பால்கி மன்னிப்பு வேண்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், **“ரிலீஸ் தேதி குறித்த தவறான அறிவிப்புகளுக்கு ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தின் பிரச்னைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக நினைத்தேன். யாரோ சிலர் செய்த தவறுகளின் விளைவுகளை நாங்கள் எதிர்கொண்டுவருகிறோம். படக்குழுவினர் விரைவில் புரொமோஷனை தொடங்கவுள்ளனர். விரைவில் சரியான ரிலீஸ் தேதியை அறிவிக்கின்றோம். மன்னித்துவிடுங்கள்”** என்று கூறியுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0