uபடத்துக்கு தடை: செல்வராகவனுக்கு வந்த சோதனை!

Published On:

| By Balaji

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ வருகிற மார்ச் 05ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது.

நெஞ்சம் மறப்பதில்லை படமானது தயாராகி நான்கு வருடங்களுக்கு மேல் ஆகியும் பொருளாதாரச் சிக்கலினால் வெளியாக முடியாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் தான், ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்துக்கான ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றி படத்தை, மார்ச் 05ஆம் தேதி வெளியாவதை உறுதிசெய்தது. சமீபத்தில் கூட, படத்திலிருந்து டிரெய்லர், ஸ்நீக் பீக் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பணக்கார பிஸ்னஸ் மேனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். இவருக்கு மனைவியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். இவர் வீட்டில் வேலை பார்ப்பவராக ரெஜினா வருகிறார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியிருக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அதன்படி, இப்படத்தினை மார்ச் 15ஆம் தேதிவரை ரிலீஸ் செய்யக் கூடாதென இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது நீதிமன்றம். என்ன காரணமென்றால், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தரவேண்டிய 1.24 கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொகையைத் தரக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது ரேடியன்ஸ் நிறுவனம். பணத்தைத் தரும்வரை படத்தை நிறுத்திவைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆக, நெஞ்சம் மறப்பதில்லை சொன்ன படி வெளியாகுமா என்பது சந்தேகமே.

-ஆதினி

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share