விஜய்சேதுபதி , பார்த்திபன் நடிப்பில் உருவாகிவரும் படம் துக்ளக் தர்பார். நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்சேதுபதி – பார்த்திபன் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் இரண்டு பேருக்குமே சமமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. அரசியல் கதையாக இப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தின் டீஸர் வீடியோ கூட சமீபத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
படத்தில் பார்த்திபனின் பெயர் கூட ராசிமான். படமெங்கும் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் போஸ்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சியை குறிக்கும் லோகோ இடம்பெற்றுள்ளது. அதோடு, பார்த்திபனின் கதாபாத்திரமானது சீமானின் கேரக்டரின் பிரதிபலிப்பாக இருப்பதாக சீமானின் தம்பிகள் கொந்தளிக்கத் துவங்கினார்கள். அதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது. என்னவென்றால், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான 800 படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தது சீமான் தான். அதன்பிறகு பெரிய பிரச்னையாகி, படமும் நின்றது. அதற்கு பழிவாங்கவே பார்த்திபன் கதாபாத்திரத்தை சீமான் கேரக்டரைக் கொண்டு வடிவமைக்கச் சொல்லியிருக்கிறார் விஜய்சேதுபதி என சொல்லப்பட்டது.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விஜய்சேதுபதிக்கு போனில் அழைத்து பேசியிருக்கிறார்கள். சீமானை கிண்டல் பண்ணுவது போல பார்த்திபன் கேரக்டர் இருக்கிறதே என கேட்டதற்கு, விஜய்சேதுபதி அப்படியா, எனக்குத் தெரியவே தெரியாது என கூறிவிட்டாராம். அதெப்படி, என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என தெரியாமலா நடிப்பார் என கோவத்தில் இருக்கிறார்களாம் சீமானின் தம்பிகள்.
இந்நிலையில், பார்த்திபன் சீமானிடம் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இந்தப் படம் குறித்து முறையாக விளக்கமொன்றையும் அளித்திருக்கிறார் பார்த்திபன். இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது, “ நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல” என்று கூறியுள்ளார்.
**-பிரியா**�,