நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வரும் நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நான்கு வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்கள்.
இந்நிலையில், நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்காக தீவிரமாக பெண் பார்த்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை நாக சைதன்யா மறுத்துள்ளார். இந்த செய்தியை மறுத்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமும் கொடுத்துள்ளார். ‘சமந்தாவும் நானும் பிரிவதாக தான் அறிவித்துள்ளோம். இன்னும் சட்டப்படி நாங்கள் பிரியவில்லை. அதற்குள் இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை. தயவுசெய்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பாதீர்கள்’ எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாக சைதன்யா தற்போது பாலிவுட் படம் ஒன்று, வெங்கட்பிரபுவுடன் ஒரு பைலிங்குவல் படம் என பிஸியாக உள்ளார்.
இன்னொரு பக்கம் சமந்தாவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம், ஹாலிவுட் படம் என சமந்தாவும் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் திடீரென தத்துவார்த்தமாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் நடிகை சமந்தா. அதில், “என் மவுனத்தில் அறியாமைக்காக எப்போதும் தவறிழைக்காதே, என் அமைதி ஏற்றுக் கொள்வதற்கு, என் கருணை பலவீனத்திற்கு,” என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்து, “கருணைக்கு காலாவதி தேதி இருக்கலாம், சும்மா சொல்கிறேன்,” என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு யாருக்கு, எதற்காக இப்படி சமந்தா பதிவிட்டுள்ளார் என்பதில் சமூக வலைதளத்தில் அவரை பின்தொடர்பவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
**-இராமானுஜம், ஆதிரா**