Tலெஜண்ட் சரவணாவின் ‘மொசலோ மொசலு’

entertainment

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் தி லெஜண்ட் படத்தின் முதல் பாடல் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று (ஏப்ரல் 9) வெளியிடப்பட்டது.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதோடு தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார் சரவணன். நாயகியாக இந்தி மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார்.
ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் உள்ளிட்டோர் நடனம் அமைக்க கனல் அரசு ஃபைட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார். சமீபத்தில், இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், நேற்று முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘தி லெஜண்ட்’ என்று தலைப்பிட்டுள்ளதால் தமிழ், தெலுங்கின் லெஜண்ட் இயக்குநர்களாகப் பார்க்கப்படும் மணிரத்னம், ராஜமெளலி, இயக்குநர் சுகுமார் ஆகியோரை வைத்து பாடலை வெளியிட வைத்துள்ளது படக்குழு.
பா.விஜய் எழுதியுள்ள ’மொசலோ மொசலு’ என்று துவங்கும் பாடலில் ஸ்டைலிஷாக நடனம் ஆடி கவனம் ஈர்க்கிறார் சரவணன். பாடல் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் சினிமா வட்டாரமும், தொலைக்காட்சி விளம்பரத்தில் அவரை பார்த்து ரசித்தவர்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் ஜாலியாக பாடலையும் அவரது நடனத்தையும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

**-அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *