நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்?

Published On:

| By admin

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் சரத்குமார் அவருக்கு அப்பாவாக நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தனது 66வது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜூ இந்த படத்தைத் தயாரிக்கிறார். ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ படங்களில் தவறி போன வாய்ப்பு இந்த படம் மூலம் ராஷ்மிகா மந்தானாவுக்கும், இசையமைப்பாளர் தமனுக்கும் கிடைத்திருக்கிறது. முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்று அந்த படங்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஆனது. விஜய் தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘புதிய கீதை’ போல குடும்பங்களைக் கவரும் விதமான கதைக்களம் இதில் இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருந்தார். கடந்த வாரம் பூஜை தொடங்கிய போதே படப்பிடிப்பும் ஆரம்பித்து விட்டதாகத் தகவல் வந்தது. ‘பீஸ்ட்’ திரைப்படத்தைப் போலவே, இந்த படமும் முதலில் பாடலோடு தான் தொடங்குகிறார்கள். மேலும் சென்னையில் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கான பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டிருந்தார். அவர் நடிகர் விஜய்யின் தந்தையாக நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விஜய்க்கு படத்தில் இரண்டு அண்ணன் கதாபாத்திரம் இருப்பதாகவும் அதில் நடிக்க வைக்கப் பிரபல 80களின் கதாநாயகர்களிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share