சரவெடி காமெடியுடன் ‘பாரிஸ் ஜெயராஜ்’ டிரெய்லர்!

Published On:

| By Balaji

Lசந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களிலேயே ‘ஏ1’ படம் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தை ஜான்சன் கே என்பவர் இயக்கியிருந்தார். ஹீரோவைப் பார்த்ததும் காதலில் விழும் ஹீரோயின், காதலுக்கு வில்லனாகும் ஹீரோயினின் தந்தை எனும் வழக்கமான சினிமாவுக்குள் லொள்ளு சபா ஃபார்முலாவில் சரவெடி சிரிப்புகளை அள்ளித் தெளித்திருக்கும் படம் ஏ1.

இந்தப் படத்தைத் தொடர்ந்து வெளியான டகால்டி, பிஸ்கோத் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. மீண்டும், ஏ1 இயக்குநரை அழைத்துவிட்டார் சந்தானம்.

மீண்டும் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் காம்போவில் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் பாரிஸ் ஜெயராஜ். இந்தப் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. எப்படியும், அடுத்த மாதம் படத்தின் ரிலீஸை எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தில் சந்தானம் வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகராக வருகிறார். டிரெய்லரைப் பார்த்தால், செம ரகளையாகப் படம் இருக்கும் என்றே தெரிகிறது.

[**டிரெய்லர்**](https://www.youtube.com/watch?v=IGk51zb48So&feature=emb_logo)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share