கேலக்சி S10 Lite என்ற புதிய ஸ்மார்ட்போனை, சாம்சங் நிறுவனம் இன்று விற்பனைக்குக் கொண்டுவருகிறது. இது பற்றிய அதிகாரபூர்வத் தகவலை சாம்சங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
4 சென்டிமீட்டர் அளவே உள்ள சிறிய பூச்சிகளைக்கூட நுணுக்கமாக புகைப்படம் எடுக்கும் வகையில் ஸ்பெஷல் கேமரா செட்டப்போடு இந்த போன் சந்தைக்கு வர இருக்கிறது. மேலும் பல்வேறு வசதிகளோடு சிறப்பு விற்பனையாக வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை வலைதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த கேலக்சி S10 Lite பற்றிய முழு விவரங்களும் ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கேலக்சி S10 என்ற ஸ்மார்ட்போன் மாடல் சென்ற ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதன் விலை கிட்டத்தட்ட 70,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இதன் லைட் வெர்ஷனாக வெளியாகும் கேலக்சி S10 Lite, 52,000 ருபாய் வரை விற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**இதன் சிறப்புகள்**
1) 6.7 இன்ச், இன்பினிட்டி-ஓ HD ஸ்க்ரீன் டிஸ்ப்ளே.
2) 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், செல்ஃபிக்காக 32 மெக்பிக்ஸல் முன் பக்க கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் பிரைமரி கேமராக்கள் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் பொருத்துப்பட்டுள்ளது.
3) சூப்பர் ஸ்டெடி OIS மோட் மூலம் சிறந்த காணொலிகளை எடுக்கக்கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
4) கேமர்களுக்காகவே ஸ்னாப்டிராகன் 855 ஆக்டா கோர் பிராசஸர், அதிவேக செயல்பாட்டுக்காக 8GB RAM, 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் சேர்க்கப்பட்டிருக்கிறது.
5) ஆண்ட்ராய்டு 10 OS, Type C Charger, இரண்டு நானோ சிம்கள், வை-பை 802.11 உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
6) முக்கியமாக இரண்டு நாட்கள் நீடிக்கக் கூடிய மற்றும் அதிவேகமாக சார்ஜிங் ஆகக்கூடிய 4500 mah பேட்டரி, பேஸ் லாக் வசதிகளோடு வருகிறது இந்த கேலக்சி எஸ் 10 லைட்.
இதுபோன்ற சிறப்பு ஸ்பெசிபிகேஷன்ஸோடு, சென்ற ஆண்டு வந்த மாடலைப் போல அதே நேரத்தில் குறைந்த விலையில் வெளியிடப்படுவதால், நல்ல விற்பனைக்கு உள்ளாகும் என்று கணிக்க முடிகிறது.�,