பிரசவ வலி: சமந்தாவின் நெகழ்ச்சி பதிவு!

entertainment

தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தபின்பு ஊடகங்களின் கவனம் சமந்தா – நாகசைதன்யா சம்பந்தமான செய்திகளை ஓரங்கட்டிவிட்டது. இருந்தபோதிலும் அவர்களது விவாகரத்து விவகாரம் வெளியானபோது அதற்கான காரணங்களில், சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்பியதால் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து வந்தார். அதன் காரணமாகவே அவருக்கும் நாகசைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர் என பிரதானமாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிரசவம் குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டுள்ளார் சமந்தா. அதில், உலகிலேயே மிகப்பெரிய வலி பிரசவம் தான். அந்த வலியை ஒரு பெண் தாங்கிக் கொண்டு குழந்தை பெறுகிறாள். ஆனால் அந்த குழந்தையை பார்த்தவுடன் அவளது வலிகள் எல்லாம் மறந்து முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகிறது. இதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.

இதையடுத்து தாய்மையைப் பற்றி இத்தனை அருமையாக புரிந்து வைத்துள்ள சமந்தா எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்திருக்க முடியும் என்று அவருக்கு ஆதரவான கருத்துகள் வெளியாகி வருகிறது.

**அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.