jஅசிஸ்டண்டுக்காக சாப்பாடு விற்ற சமந்தா!

Published On:

| By Balaji

சினிமா வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சியாக தெரிகிறதோ, அதே அளவுக்கு அதன் மோசமான சூழல்களையும் மற்ற எல்லா தொழில்களையும்போல கொண்டிருக்கிறது. அதிலிருந்து முன்னேற்றமடைந்து அடுத்த கட்டத்தை அடைவது என்பது எல்லோருக்கும் நிகழ்ந்துவிடுவதில்லை. ஆனால், தனக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு அப்படியொரு முன்னேற்றம் வாய்க்கும்போது அங்கு நானில்லாமல் இருப்பேனா என்று வலிய வந்து சிறப்பித்திருக்கிறார் சமந்தா.

சினிமாவில் பத்து வருடங்களைத் தாண்டி டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகை சமந்தாவின் வெற்றியைப்பற்றிப் பேசாத ஊடகங்களே இருக்கமுடியாது. வெற்றியைப் பேசும்போது சமந்தா எப்படி நடித்தார், என்னென்ன சாதனைகளை செய்தார் என விளக்கும் பலருக்கும் சமந்தாவின் திறமைகளின் மீது விளக்கொளிகளை வீசியவர்கள் யார் யார் என்பதைக் குறிப்பிடுவதற்கான பொறுமை இல்லாமல் போனாலும், இன்று சமந்தாவின் புகழொளியில் வைரமாக மின்னுகிறார் ஆர்யன்.

கடந்த 11 வருடங்களாக, கிட்டத்தட்ட சமந்தா சினிமாவுக்கு வந்ததிலிருந்து அவருக்கு அசிஸ்டண்டாக வேலை செய்தவர் ஆர்யன். சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட எழுச்சி, வீழ்ச்சி ஆகிய அனைத்திலும் துணையாக இருந்த ஆர்யன், புதியதாகத் திறந்திருக்கும் ரெஸ்டாரண்டின் திறப்பு விழாவுக்கு வருகை தந்ததுடன், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறி ஆர்யனுக்கான தனது நன்றிக்கடன்களை செலுத்தியிருக்கிறார் சமந்தா.

நிகழ்ச்சி முழுவதும் மேடம், மேடம் என்று ஆர்யன் சுற்றிக்கொண்டிருக்க எதற்கும் கவலைப்படாமல் பல விதமான உணவுகளை சுவைத்துப் பார்த்ததுடன், அவற்றைப் பற்றி தனது அசிஸ்டண்டிடம் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சமந்தா. “சமந்தாவின் நிழல் போலவே சுற்றிவரும் ஆர்யன் இதுவரை எந்த இடத்திலும் சமந்தாவின் பெயரை அவரது வாயால் சொல்லி சினிமா துறையில் யாருமே பார்த்ததில்லை” என்கின்றனர் அவருடன் பணிபுரிந்தவர்கள். இத்தனை சிறப்புகளைக் கொண்ட தனது அசிஸ்டண்டுக்காக சமந்தா உணவு விற்று அவரது லாபக் கணக்கைத் தொடங்கிவைத்திருக்கிறார்.

**-சிவா.**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share