நடிகை சமந்தா, சமீபத்தில் தனது கணவர் நடிகர் நாக சைதன்யாவை விட்டுப் பிரிந்தார். பிரிவுக்குப் பின் மீண்டும் சினிமாவில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள எந்த நிலைக்கும் இறங்கி நடிக்க தயாராகி வருகிறார். கணவரை விட்டு பிரியாதபோதே அதிகபட்ச கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சூட்டை கிளப்பி வந்தவர் சமந்தா.
பான்- இந்தியா படமாக உருவாகி வரும் ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டுள்ளார். சமந்தா ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடுவது இதுவே முதல் முறை. இப்பாடலில் உச்சகட்ட கிளாமரில் நடனமாடவும் சமந்தா சம்மதித்துள்ளாராம். எனவே, இந்தப் பாடலை பிரம்மாண்டமாக படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இப்படி ஒரு ‘ஐட்டம் சாங்’ இதுவரை தெலுங்குத் திரையுலகத்தில் வந்தது இல்லை என்று சொல்லுமளவிற்கு பாடல் இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தெலுங்கில் ‘சாகுந்தலம்’ படத்திலும், தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா.
**-இராமானுஜம்**
�,