சமூக வலைத்தளங்களில் திரையுலக நடிகைகளின் முதல் தேர்வாக இருப்பது இன்ஸ்டாகிராம். இதில் தான் அதிகமான புகைப்படங்களையும், வீடியோக்களையும், செய்திகளையும் பதிவிடுவது எளிது என்பதால் அந்த வலைதளத்தைத்தான் நடிகைகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 24.8 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். அவருக்கு அடுத்தபடியாக 20.2 மில்லியன் எண்ணிக்கை பாலோயர்களுடன் காஜல் அகர்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தற்போது 20 மில்லியன் பாலோயர்கள் எண்ணிக்கையில் சமந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பாலோயர்களைப் பெற்றதையடுத்து “உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா. சமீபத்தில் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தாலும் சமந்தாவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதை இந்த எண்ணிக்கை சுட்டிக் காட்டுகிறது.
**அம்பலவாணன்**
�,