இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தா

entertainment

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பிராண்டுகளுக்கு மாடலாக இருப்பதன் மூலம் நடிகை சமந்தா கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.

பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களை ரசிகர்களுடன் கலந்துரையாடும் ஒரு தளமாக பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் பல முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பர தூதுவராகவும், பொருட்களை பிரமோஷன் மூலம் ரசிகர்களிடையே கொண்டு போய் சேர்ப்பதின் மூலமாகவும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்த பட்டியலில் நடிகை சமந்தா முன்னிலையில் உள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 24 மில்லியன் என தன்னை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை வைத்திருக்கிறார் சமந்தா. மேலும், அவருடைய பல ஃபோட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பிராண்ட் ஒன்றின் பிகினி உடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை விளம்பர நோக்கில் பதிவிட்டார். இதற்காக மட்டும் சமந்தா கிட்டத்தட்ட மூன்று கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாதம் இரண்டு, மூன்று பிராண்டுகளுக்கு இது போல விளம்பரப்படுத்துவதை சமந்தா வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால், இன்ஸ்டாகிராமில் மாதம் இது போன்ற விளம்பரங்கள் மூலமே கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.

சமீபத்திய கணெக்கெடுப்பின் படி, அதிக அளவில் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை வைத்திருக்கும் பிரபலங்களில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி (200 மில்லியன்) முதலிடத்தில் உள்ளார். இவர்கள் தவிர நடிகை தீபிகா படுகோனே, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *