ரிக்கி பாண்டிங்கின் கோச்சாகிறார் சச்சின் டெண்டுல்கர்!

entertainment

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்பிற்கு நிதி திரட்டும் பொருட்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் பங்குபெறும் அணிகளின் விவரத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செவ்வாய் கிழமை (ஜனவரி 21) அறிவித்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் கொண்ட அணி, பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு களமிறங்கவுள்ளளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐசிசி-யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், பாண்டிங் தலைமையிலான கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஷேன் வார்ன் தலைமையிலான கிரிக்கெட் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொர்ட்னி வால்ஷ் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிகளில் சிறந்து விளங்கிய பிரெட் லீ, ஆடம் கில்கிறிஸ்ட், மைக்கல் கிளார்க், ஷேன் வாட்சன் போன்ற வீரர்களும் கலந்துகொள்கிறார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக செயலாளர் கெவின் ராபர்ட்ஸ்,சச்சின் மற்றும் வால்ஷ் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில், அவர்கள் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். அவர்களை மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மிக சிறந்த நாளாக இருக்கப்போகும், இந்த நிகழ்வில் இவர்களுடைய பங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய ராபர்ட்ஸ் இதில் திரட்டும் நிதி ஆஸ்திரேலியாவில் இருக்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கும், இந்த காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டோருக்கும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *