�விஜய் உடனான பனிப்போர் முடிவுக்கு வருமா? அரசியலில் ஏஸ்.ஏ.சியின் புது முடிவு!

entertainment

இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான சந்திரசேகர், தன் மகனுடன் ஏற்பட்ட மனகசப்பை சரி செய்ய பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் பெயரில் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்தார். இந்த விவகாரம் விஜய் காதுகளுக்கு செல்ல, “அப்பா பதிவு செய்ய இருக்கும் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம்’’ என்று அறிக்கை வெளியிட்டார். அதுமட்டுமின்றி “எனது படத்தையோ பெயரையோ சந்திரசேகர் பயன்படுத்தக்கூடாது. என் அனுமதியின்றி என் பெயரையும் புகழையும் பயன்படுத்துபவர் மீது வழக்குத் தொடுப்பேன்’’ என்றும் எச்சரிக்கை விடுத்தார். விஜய்யின் இந்த அறிக்கைக்கு பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜய் இடையே உள்ள பிரச்னை பொதுவெளிக்கு வந்தது.

மேலும் இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் தன் தந்தையிடம் பேசுவதேயில்லை என்றும் தன் தந்தையின் போன் கால்களை கூட எடுப்பதில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்தன. விஜய் தனது முடிவில் யாரும் தலையிடுவதை விரும்பாததால் நீண்ட காலமாக தந்தையின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. அதோடு, தந்தை நம்பரை போனில் ப்ளாக் செய்து வைத்திருப்பதாகவும் ஒரு சொல்லப்பட்டது.

எஸ்.ஏ.சந்திரசேகர் தன் வருதத்தை ஒவ்வொரு பேட்டியிலும் பதிவு செய்தார். விஜய் ஒரு தீய வட்டத்தில் சிக்கியிருப்பதாகவும்,, விஜய்யை ஒரு நடிகராக வளர்த்தெடுக்க தனது வாழ்க்கையை தியாகம் செய்ததாகவும் கூறி பேட்டி கொடுத்தார். மேலும் விஜய்யின் ரசிகர் மன்றத்தின் வளர்ச்சியிலும் தன் பங்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அரசியலில் ஈடுபடுவதில் சந்திரசேகருக்கு விருப்பம் இருந்தாலும் அண்மையில், தன் கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அவர் திரைப்பட வேலைகளில் மும்முரமாக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மகனுடன் ஏற்பட்ட மனகசப்பை தானே சரிசெய்ய முன் வந்துள்ளார் சந்திரசேகர். விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி, அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டு இந்த சூழலை சரிசெய்ய வேண்டும். அதற்காக காத்திருப்பதாக சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். விஜய் தன் தந்தையிடம் மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

– தீரன்

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *