Bரஜினியை சுற்றும் வதந்தி!

entertainment

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு பல இயக்குநர்களிடம் கதை கேட்டு உள்ள ரஜினிகாந்த் இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. எந்த இயக்குநரும் ரஜினிகாந்த் எதிர்பார்த்ததை போன்று கதைகளை கூறாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, தாணு தயாரிப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது. தற்போது சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அதையடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். அதனால் அந்த படத்தை முடித்ததும் ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

அண்ணாத்த படத்திற்கு பின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. அதன் பின் சம்பளத்தை குறைத்துக்கொண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் உலாவியது. இறுதியாக இளையராஜாவின் இசையில் பால்கி இயக்கத்தில் பாவலர் கிரியேசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கப்போகிறார் என்கிற தகவல் வெளியானது. தற்போது கலைப்புலி கிரியேஷன் சார்பில் தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கப்போகிறார் என்கிற தகவல் பரவி வருகிறது. இந்த தகவலை ஏற்கனவே கலைப்புலி எஸ்.தாணு தனிப்பட்ட முறையில் தன் நட்பு வட்டத்தில் அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை என கூறியுள்ளார்.

மகள் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரையும் சமாதானப்படுத்தி விவாகரத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னரே ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இருக்கும். அதுவரை புதிய படம் என்பதை பற்றி ரஜினிகாந்த் யோசிப்பதற்கு இடமில்லை என்கிறது ரஜினிகாந்த் குடும்ப வட்டாரத்தினர்.

**அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0