சுஷ்மிதா சென்-லலித் மோடி டேட்டிங்: முன்னாள் காதலரின் ஃபீலிங்!

entertainment

சுஷ்மிதா சென், லலித் மோடியின் உறவுக்காக மகிழ்ச்சியாக இருப்போம் என அவரது முன்னாள் காதலன் ரோஹ்மான் ஷால் கூறியுள்ளார்.

நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஐபிஎல் புகழ் லலித் மோடி இருவரும் தாங்கள் தற்போது டேட்டிங் செய்வதாக அதிகாரபூர்வமாக சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். சுஷ்மிதா சென், தான் டேட்டிங் செய்த புகைப்படத்தை பகிர்ந்து “நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன்! திருமணமாகவில்லை, மோதிரங்கள் இல்லை … நிபந்தனையின்றி சூழப்பட்டுள்ளது அன்பினால்”  என்று கூறிப்பிட்டுள்ளார். இவை சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது.

சுஷ்மிதா சென் லலித் மோடியுடன் டேட்டிங் செய்த செய்திக்கு சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலரும் மாடலுமான ரோஹ்மான் ஷால் பதிலளித்துள்ளார். ’அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும், காதல் அழகாக இருக்கிறது. அவள் யாரையாவது தேர்ந்தெடுத்தால் அவர் மதிப்புக்குரியவர் என்று எனக்கு தெரியும்.’ என்று கூறியுள்ளார்.

சுஷ்மிதா சென் மற்றும் ரோஹ்மான் ஷால் கடந்த 2018 ஆம் ஆண்டு டேட்டிங் செய்யத் தொடங்கினர். கடந்த ஆண்டு ஒரு இன்ஸ்டாகிராம் இடுகையில் அவர்கள் பிரிந்ததாக அறிவித்தனர். “நாங்கள் நண்பர்களாகத் தொடங்கினோம், நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்! நீண்ட காலமாக இருந்த உறவு முடிந்தது, காதல் உள்ளது” #nomorespeculations ”ஐ லவ் யூ” தோழர்களே என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.