மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்: ரோபோ சங்கர் விளக்கம்!

entertainment

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் ‘இரவின் நிழல்’. உலக சினிமாவில் புது முயற்சியாக இந்த படம் ஒரே ஷாட்டில் லான் லீனியர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. மே 1 அன்று நடைபெற்ற இந்தப் படத்தின் விழாவில் நடிகர் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பவம் சர்ச்சையானது.
இதற்கு பார்த்திபன் அப்போதே விளக்கமும் வருத்தமும் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் இது சம்பந்தமான செய்திகள் இணையதளங்களில் முக்கிய செய்தியாக கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரோபோ சங்கர் கூறுகையில், “ஒட்டுமொத்த விழாவையும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே கவனித்து வந்தார். மைக் பிரச்சினையானதால் அந்த நேரத்தில் சற்று டென்ஷனாகிவிட்டார். இதற்காக போனில் என்னிடம் பல முறை மன்னிப்பு கேட்டார். அவர் பேசியதை கேட்டு நானே கண்கலங்கி விட்டேன். அப்படி சொல்லாதீங்க, நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றேன். நிஜத்தில் பழகுவதற்கு இனிமையான நபர். யாரையும் புண்படுத்தாத ஒரு மனிதர். இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். 25 படங்களில் நடித்த அனுபவம் இந்தப் படத்தில் கிடைத்தது. படத்தில் ஒன் மேன் ஆர்மியாக வேலை பார்த்துள்ளார் பார்த்திபன். உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த விருதையும் இந்தப் படம் பெறும். இந்தப் படத்தில் நான் இருந்தது பெருமை. உலகமே திரும்பி பார்க்க போகும் ஒரு படமாக இருக்க போகிறது” என்கிறார்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *