கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என தெலுங்கு சினிமாவில் பட்டாசாய் வெடித்துவிட்டு இப்போது தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் களமிறங்கக் காத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் இவரது முதல் திரைப்படமாக இருக்கப்போவது, கார்த்தியுடன் அவர் நடித்துவரும் சுல்தான் திரைப்படம். ரெமோ திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடித்துள்ள சுல்தான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. முழுக்க முழுக்க கிராமத்தில் நடைபெறும் கதையாக அமைந்துள்ள சுல்தான் திரைப்படத்தை, அதில் வேலை செய்த பலரும் போற்றி வருகின்றனர். அந்தப் பட்டியலில் இணைந்து, தனது முதல் தமிழ் திரைப்பட அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் ராஷ்மிகா.
ராஷ்மிகா பதிவிட்டுள்ள ட்வீட்டில் “நான் வேலை செய்த டீம்களில் மிகவும் இனிமையானவர்களைக் கொண்டது சுல்தான் டீம். எவ்வளவு கடுமையான இடங்களில் ஷூட்டிங் நடந்திருந்தாலும், நான் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அதைப்பற்றி வருத்தப்படாமல் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டு ஷூட்டிங்கை முடித்த சுல்தான் டீமுக்கு மிகவும் நன்றி” என்று கூறியிருக்கின்றார்.
ராஷ்மிகா தமிழில் சுல்தான், கன்னடத்தில் பொகரு மற்றும் தெலுங்கில் புஷ்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்த மூன்று திரைப்படங்களும், 2021ஆம் ஆண்டு ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. இதுமட்டுமின்றி தமிழிலும், இந்தியிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க இரண்டு படங்களில் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் ராஷ்மிகா.
-மதன்-
�,”