நடிகர் வடிவேலு திரைப்படங்களில் பேசிய வசனங்களையும், அவரது வித்தியாசமான முகபாவனைகளையும் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் பொருத்திவிட முடியும். அதனால் தான் இன்று வரை மீம் கிரியேட்டர்களுக்கு டெம்பிளேட்களை அள்ளித்தருகிறார்.
வெள்ளித்திரையில் இருந்து அவர் விலகி நின்றாலும், மொபைல் திரைகளில் எப்போதும் நிறைந்தே நிற்கிறார். அந்தவகையில் நடிகை ராஷ்மிகாவின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வடிவேலுவுடன் இணைத்து வெளியாகியுள்ள மீம்கள் அனைவரையும் ரசிக்கவைத்துள்ளது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை ராஷ்மிகா. 2016-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்டி’ திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துவந்தார். 2018-ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் ரசிகர்களைப் பெற்றார். நடிப்புத் திறமையை விடவும் குறும்புத்தனம் நிறைந்த நடவடிக்கைகளால் அதிகம் கவனிக்கப்பட்ட ராஷ்மிகா தற்போது சுல்தான் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் நடத்திய ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணைய உலகில் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. ராஷ்மிகாவின் வித்தியாசமான முகபாவனைகள், குறும்புத்தனம் நிறைந்த சிரிப்பு என்று பலரையும் அந்த புகைப்படங்கள் ரசிக்க வைத்தாலும், மீம் கிரியேட்டர்களை வேறு விதமாக சிந்திக்க வைத்துள்ளது.
ராஷ்மிகாவின் ஃபோட்டோஷூட்டில் இடம்பெற்ற எல்லா முகபாவனையும், வடிவேலுவின் திரைப்படங்களில் இடம்பெற்றவை என்பதாக சில மீம்கள் உருவாக்கப்பட்டு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அச்சு அசலாக வடிவேலுவின் முகபாவனைகளோடு ஒத்துப்போகும் ராஷ்மிகாவின் புகைப்படங்களைப் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
‘படத்த தான் காப்பி அடிக்கிறாங்க, ஃபோட்டோவ கூட விட்டுவைக்கலையா?’ என்பதாகவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”