செல்லப்பிராணியால் தயாரிப்பாளர்களுக்குச் செலவு வைக்கிறேனா?: ராஷ்மிகா மந்தனா

entertainment

நடிகை ராஷ்மிகா மந்தனா தான் ஒப்பந்தமாகியிருக்கும் படங்களுக்குத் தன்னுடைய உதவியாளர்களை அதிகம் கூட்டி வருவதாகவும் இது மட்டுமல்லாமல் தன்னுடைய செல்லப்பிராணியான நாய்க்குக்கூட டிக்கெட் போட்டு தன்னுடன் வைத்து கொண்டு,

தயாரிப்பு நிறுவனத்துக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும் தகவல் வெளியானது. இந்தச் செய்தியை மறுத்து அதற்கான விளக்கத்தையும் ராஷ்மிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ளார்.

பொதுவாக, ஒரு படத்துக்கு உச்ச நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்யும்போது அவர்களுக்கு படப்பிடிப்புத் தளத்திலும் அல்லது அவர்களுக்கு ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்தாலும் அவர்களுடன் அவர்களது உதவியாளர்களுக்கும் தங்கும் வசதிகளையும் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உதவியாளர்கள் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களைக் கூட்டி வருவதாகவும் மேலும் அவர் வளர்க்கும் நாய் அவரை விட்டு இருக்க முடியாது என்பதால் அதற்கும் சேர்த்து பயணச் செலவு, தங்குமிடம் போன்றவற்றையும் தயாரிப்பாளர்களிடம் கேட்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாக விமானத்தில் நாய்களைக் கொண்டு வரும்போது அதற்கான எடை பார்த்து விட்டு அது விமானத்தில் வருவதற்கு தகுதியானதா உள்ளிட்ட சான்றிதழ்களைப் பார்த்து தான் அனுமதிப்பார்கள்.

அதுவும் எல்லா விமானத்திலும் செல்லப் பிராணிகளை ஏற்றி செல்வதில்லை. இதெல்லாம் பார்த்தால், ராஷ்மிகாவால் தயாரிப்பாளருக்கு அதிக சுமை என்று ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை ராஷ்மிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘மன்னித்துவிடுங்கள்! என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

உங்களது அக்கறைக்கு நன்றி. ஆனால் என்னுடைய செல்லப்பிராணியை நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பே இல்லை.

ஏனெனில், அதற்கு பயணம் செய்வது என்பது சுத்தமாக பிடிக்காது. அது மிகவும் மகிழ்ச்சியாக ஹைதராபாத்தில் உள்ளது. அதனால் இதுபோன்ற செய்திகளை தவிர்த்து விடுங்கள்.

ஆனால், இந்தச் செய்தி என்னுடைய நாளை சிறப்பானதாக மாற்றியிருக்கிறது’ என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *