சுகுமார் இயக்கத்தில் தயாராகியுள்ள புஷ்பா படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்… அவர்களுடைய வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் அத்துமீறலை, சுயநலத்தை எடுத்துக் கூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா,மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
புஷ்பா படத்தில் சமந்தா ஆடியா ஐட்டம் பாடல், அதில் இடம்பெற்றுள்ள பாடல்வரிகள் ஏற்கனவே விவாதத்தை ஏற்படுத்தியது. ஆண்கள் சங்கம் தங்களை மலினப்படுத்துவதாகவும், பாடலை தடைசெய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக கூறி வந்தனர்.
இதற்கு இடையில் நேற்று முன் தினம் புஷ்பா படத்திற்காக கேரளாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா அணிந்து வந்த ஆடை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறது.
நடிகைகள் தங்கள் திறமையின் மூலம் வாய்ப்புக்கள் பெறுவது சினிமாவில் வெற்றிபெறுவதில் நம்பிக்கை கொள்ளாமல் இதுபோன்ற பொது நிகழ்வுகளில் கவர்ச்சி காட்டுவது, ஆடை குறைப்பில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமற்ற, வரம்புமீறலாக விமர்சிக்கப்பட்டு வந்தாலும் நடிகைகள் தங்களை பொறுப்புமிக்கவர்களாக மாற்றிக்கொள்ள தயாராக இல்லாத நிலை தொடர்கிறது.
**-இராமானுஜம்**
�,