pகீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து கூறிய ரஜினி

Published On:

| By Balaji

சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘தலைவர் 168’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் பிற நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் மகாநடி திரைப்படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கீர்த்தி சுரேஷிற்கு வழங்கினார். டெல்லியில் நடந்த விழாவில் விருதைப் பெற்ற அவர் தலைவர் 168 படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் வந்துள்ளார்.

அவருக்கு தலைவர் 168 படக்குழுவினர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தங்கள் மகிழ்ச்சியை கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷிற்கு பூங்கொத்து கொடுத்து கேக் ஊட்டி மகிழும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share