நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் நேற்று(ஏப்ரல் 13) திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, ரெடின், செல்வராகவன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
‘பீஸ்ட்’ படத்தை அடுத்து நெல்சன் நடிகர் ரஜினிகாந்த்தின் 169வது படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு ‘பீஸ்ட்’ பட வெளியீட்டிற்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி முதன் முறையாக இணைகிறார் என்பதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு உள்ளது.
‘பீஸ்ட்’ பட வெளியீட்டிற்கு பின்பே ரஜினியின் பட வேலைகள் ஆரம்பிக்கும் என்பதால் அடுத்த மாதத்தில் இருந்து பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நேற்று மாலை ‘பீஸ்ட்’ திரைப்படத்தை சன் டிவி அலுவலகத்தில் பார்த்து நெல்சனை பாராட்டி உள்ளார்.
நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி அடுத்த படத்திற்கு கதை கேட்டு கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்டு அவரிடம் கதை சொல்லும்படி நெல்சனையும் அனுப்பி இருக்கிறார். விஜய் என் மேல் வைத்த நம்பிக்கையும் ரஜினி படம் கை கூட ஒரு காரணம் என தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் நெல்சன் குறிப்பிட்டிருந்தார்.
**ஆதிரா**