நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ஹூட் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். எழுதப் படிக்க தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துகளை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பதினைந்து இந்திய மொழிகளிலும், பத்து சர்வதேச மொழிகளிலும் ஹூட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் அனைவருக்குமானது என்ற அடிப்படையில் 20,000 பேர் மட்டும் பயன்படுத்தக்கூடிய சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை (25.10.2021) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தச் செயலியை ரஜினிகாந்த் டெல்லியில் இருந்தபடி தனது குரலைப் பதிவிட்டுத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய சவுந்தர்யா, என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அவர் டிவிட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார்.
அப்போது பிறந்த யோசனைதான் இந்த ஹூட் செயலி. என் அப்பாவுக்கு தமிழ் நன்றாகப் படிக்க தெரியும். ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன். அவருக்குத் தமிழ் எழுத தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை என்றார்.
**- அம்பலவாணன்**
�,