இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நடிகை எனும் சாதனையை ரகுல் ப்ரீத் சிங் நிகழ்த்துவார் எனக் கூறப்படுகிறது. காரணம் அடுத்தடுத்து அவர் நடித்துள்ள ஏழு படங்கள் வெளிவர இருப்பதாக கூறுகிறார் ராகுல் ப்ரீத் சிங்.
ஆயுஷ்மானுடன் டாக்டர் ஜி, அமிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுடன் ரன்வே 34,
அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் தேங்க் காட், இது தவிர சத்ரிவாலி,அட்டாக் மற்றும் அக்க்ஷய் குமாருடன் பெயரிடப்படாத படம் என இந்திப் படங்கள் வரிசையாக இருக்கின்றன.
இது தவிர தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் அயலான் இந்த ஆண்டு வெளிவருகிறது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, 2022 எனது சிறந்த வருடங்களில் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 7 படங்கள் இந்தியில் 6 படங்கள் ரிலீஸுக்கு வரிசையாக இருப்பதால் 2022 ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். படங்கள் வெளிவரத் தொடங்கியதும், ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமாக இருப்பதையும், ஒவ்வொரு படமும் வெவ்வேறு வகைகளாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்” என்கிறார்.
**-இராமானுஜம்**
�,