‘உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், ரியாஸ்தீன் சேக்கிற்கும் கடந்த மாதம் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு ரஹ்மான் தற்போது ராஜஸ்தான் சென்றிருக்கிறார்.
அங்குள்ளள அஜ்மீர் தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது மனைவி சாய்ரா பானுவுடன் இணைந்து அஜ்மீர் தர்கா சென்றவர் அங்கு வழிபாடு செய்தார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும் கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே” என்று பதிவிட்டுள்ளார்.
**அம்பலவாணன்**