qராப் சிங்கர் அவதாரத்தில் சரத்குமார் மகன்!

Published On:

| By Balaji

திரை நட்சத்திரங்களான சரத்குமார்-ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகன் பாடியுள்ள ராப் பாடல் வெளியாகி உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனா இயக்கத்தில், வெளியான ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் சரத்குமார், ராதிகாவுடன் இணைந்து நடித்திருந்தார். மணிரத்னம் தயாரித்து வெளியிட்ட இந்த படத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. சரத்குமாரின் மகளான வரலட்சுமி ஏற்கனவே திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சரத்குமார், ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகன் ராகுல் ராப் பாடகராக கலைத்துறையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.

அவர் பாடிய ராப் பாடல் நேற்று(மார்ச் 6 ) மாலை 4 மணிக்கு வெளியானது. ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடல் வீடியோவை சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ராகுலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. யூட்யூபில் வெளியிடப்பட்ட வீடியோவின் கீழ் எதிர்மறை விமர்சனம் கூறிய ரசிகரிடம், “மன்னித்துவிடுங்கள் சகோதரா, அடுத்த முறை இன்னும் சரியாக கூற முயற்சிக்கிறேன்” என்று ராகுல் கூறியது பலரையும் நெகிழ வைத்தது.

இது போன்ற பல கடுமையான விமர்சனங்களுக்கும் ராகுல் தனது மன்னிப்பைக் கேட்டு வருவதோடு, அடுத்த முறை அதிக முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment