தமிழில் அறிமுகமாகி, தெலுங்கில் பிரபலமாகி இன்றைக்கு வணிகரீதியாக ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா முன்னேறியுள்ளார்.
புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்புக்கொண்ட பின்னர் சமந்தா கூடுதல் கவனத்துக்குள்ளானார். தற்போது அந்தப் பாட்டின் வரிகளின் வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சமந்தாவின் லுக்கைப் பார்த்த ரசிகர்கள் இணையத்தை விட்டு பிரிய மனமின்றி தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
தற்போது பாடல் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மையான நடிகைகள் ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகில் அதை எதிர்கொள்ள தயங்குவார்கள். ஆனால், சமந்தா எந்த முடிவு எடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உறுதி காட்டுகிறார். அப்படி எடுக்கப்பட்ட முடிவுதான் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டது என்கின்றனர் திரைத்துறையினர்.
**-அம்பலவாணன்**
�,