mரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளிய புஷ்பா

Published On:

| By Balaji

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து இருக்கும் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா தி ரைஸ்’ டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளியான படங்களில் புஷ்பா தான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது

முதல் பாகமான ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூபாய் 250 கோடி அளவில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்கும் முறையே ‘அலா வைகுந்தபுரமுலோ’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ‘புஷ்பா: தி ரைஸ்’ வெளியாகிறது.

அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமான புஷ்பா தி ரைஸ் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘புஷ்பா: தி ரைஸ்’, படத்தின் முன் வெளியீட்டு வணிகம் இன்னும் அதிமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தின் ட்ரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து வரவிருக்கும் விளம்பரங்களுடன், ‘புஷ்பா’ பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

**இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share