ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரிஷிவந்தியம் ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு வாணாபுரம் புதிய வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருளம்பாடி, பொரசப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு அதன் சுற்று வட்டார பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மின் பற்றாக்குறையை போக்கிட ஈருடையாம்பட்டு ஊராட்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல்.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட **மாற்றுத் திறனாளிகள் 44 நபர்களுக்கு 54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட்டது.**
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எடுத்தனூர், ரிஷிவந்தியம், சூளாங்குறிச்சி, ஜம்பை, மணலூர்பேட்டை, காடியார், கோளப்பாறை, ஆகிய ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சுமார் 487 வழிபாட்டு மன்றங்களுக்கு 5000 X 487 = 24,35000 என நிதியுதவி வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இஸ்லாமிய சமுதாய மக்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு திறப்பிற்கு 25 ஜமாத்திற்கு 16 டன் அரிசி மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.
சுமார் 50 வருடங்கள் பழமையான ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மக்கள் வசதிக்காக புதிதாக கட்டுவதற்கு 3.95 கோடி மதிப்பீட்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
**வறட்சி காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் 7.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 60 பொதுக் கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.**
கொடியனூர் ஊராட்சியில் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்றுத் தந்தார் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன்
வருவாய் துறையின் சார்பில் சுமார் 280 பயனாளிகளு க்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் இருந்த மண் சாலைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 3.75 கோடி மதிப்பீட்டில் 37 புதிய ஓரடுக்கு ஜல்லி சாலைகளாக மேம்படுத்தப்பட்டன.
சாதனைகள் தொடரும்…
**விளம்பர பகுதி**
.