8பிருத்திவிராஜ் நலம்!

Published On:

| By Balaji

கொரோனா என்ற பெருந்தொற்று நோய் உலகை அச்சுறுத்தத் தொடங்கியபோது, முதன்முதலாக நேசக்கரம் நீட்டத் தொடங்கிய மனிதர்களில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். வழக்கமாக நடைபெறுவதுபோல அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்துக்காகக் காத்திருந்து, அதற்குப் பணம் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொள்வதாக இல்லாமல் இந்தியத் திரையுலகம் முழுவதுமே தானாக ஒன்றிணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் தொடங்கியது. அதிலிருந்தே, கொரோனா காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி, பெரும்பாலான திரைக் கலைஞர்களின் அறிவுரைகளை இணையத்தில் காண முடிந்தது. ஆனால், அப்படிப்பட்ட திரையுலகமே இன்னொரு நடிகருக்காக வேண்டிக்கொண்டிருந்தது என்றால் அவர் தான் நடிகர் பிருத்திவிராஜ்.

கொரோனா பரவல் தொடங்கிய சமயத்தில் ஜோர்டான் நாட்டில் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்துக்காக ஷூட்டிங் சென்று சிக்கிக்கொண்டார் பிருத்திவிராஜ். அங்கிருந்து இந்தியா வரமுடியாமல் தவித்தவரை, ஒரு வழியாக இந்தியா கொண்டுவந்து சேர்த்தனர். சில வாரங்கள் குவாரண்டைனிலும், சில வாரங்களை வீட்டிலும் கழித்த பிருத்திவிராஜ், தனது ‘ஜன கன மன’ திரைப்படத்துக்கான ஷூட்டிங்குகளைத் தொடங்கினார். சில வாரங்களிலேயே உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிருத்திவிராஜ், மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது பிருத்திவிக்கு கொரோனா பாசிடிவ் எனத் தெரியவந்தது. அப்படத்தின் இயக்குநர் திஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா பாசிடிவ் என வந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியத் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக அறியப்படும் பிருத்திவிராஜின் இந்த கொரோனா கால பிரச்சினைகளையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம் எனும் அளவுக்கு அவருக்கு தொடர்ந்து இன்னல்கள் நேர்ந்தன. கொரோனா காலத்திலும் தீவிரமாக ஷூட்டிங்கை ஏன் நடத்தவேண்டும். எல்லாம் பணத்தாசை என்றும் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 4 படங்கள் பிருத்திவிராஜ் நடித்து பாதியில் நிற்கின்றன. இவர் கவனமாக இல்லாததால், இப்போது அதில் பணம் போட்டவர்களல்லவா பாதிக்கப்படவேண்டும் என்றும் கோபக்குரல்கள் எழுந்தன. காரணம், மலையாளத் திரைப்படங்கள் தரமான திரைப்படங்களைக் கொடுத்தாலும் அதன் மார்க்கெட் மதிப்பு என்பது குறைந்த பட்ஜெட் தான். மலையாள திரையுலகமும் அதிக பணம் செலவு செய்யாத ஒரு திரையுலகம். எனவே, கொரோனாவைத் தாண்டி இப்படிப்பட்ட அழுத்தங்களும் பிருத்திவிராஜுக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் பிருத்திவிராஜ்.

Tested negative on the Antigen test today. ???? Will still be continuing to isolate for one more week to be doubly sure. Once again, thanks to everyone who reached out and expressed care and concern. ???? pic.twitter.com/SMhKZy2Qny

— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 27, 2020

கொரோனாவிலிருந்து குணமடைந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்ட பிருத்திவிராஜ் “Antigen டெஸ்ட் நெகட்டிவ் என வந்திருக்கிறது. ஆனாலும், சில வாரங்களுக்கு என்னை தனிமைப்படுத்திக் கொண்டு நெகட்டிவ் என உறுதி செய்ய விரும்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றி” என்று எழுதியிருப்பதுடன், மருத்துவமனை கொடுத்த சர்டிஃபிகேட்டையும் அதனுடன் இணைத்திருக்கிறார் பிருத்திவிராஜ்.

-முத்து-�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment