cகாதலை வெளிப்படுத்திய பிரேம்ஜி அமரன்

Published On:

| By admin

நடிகர் பிரேம்ஜி அமரன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று அவர் தற்போது காதலில் இருக்கிறாரா என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகி வினய்தாவுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ’சென்னை-28’, ‘சுப்ரமணியபுரம்’, ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரேம்ஜி பிரபல பின்னணி இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும் இயக்குநர் வெங்கட்பிரபுவின் தம்பியும் ஆவார். 40 வயதை கடந்துள்ள பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் பிரேம்ஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் பாடகி வினய்தாவுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ‘என்னை உன் பார்வையால் தாங்கி பிடித்திருக்கிறாய், இரவில் உன் கைகளில் நடனமாடுகிறேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் புகைப்படமும் தான் இப்போது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த 2022ம் வருடம் எப்படி இருக்கும் என பிரேம்ஜி இன்ஸ்டாவில் ஃபில்டரோடு ஒரு வீடியோவை பகிர அதில் அவருக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என ஜாலியாக வந்திருக்கிறது.

எனவே, பாடகி வினய்தாவுடன் காதல் என்பது உண்மைதானா என ரசிகர்கள் தற்போது பிரேம்ஜியிடம் கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share