�
ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் இந்தியில் பேசியதற்காக ஒருவரை அறைவது சரியல்ல என்ற விமர்சனம் வட இந்தியாவிலும், மார்வாடிகள் மத்தியிலும் எதிர்ப்பு வலுத்துவருகிறது என செய்திகள் வந்து கொண்டு இருந்தன.
அதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களோ, இது இந்தி எதிர்ப்பு கிடையாது, காட்சி புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று எதிர்வாதம் செய்து வந்தனர்.
இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், “ ஜெய்பீம் போன்ற ஒரு படத்தை பார்த்து பழங்குடியின மக்களின் கஷ்டம் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்டஅநீதி தெரியவில்லை. ஆனால் அறைந்தது மட்டுமே தெரிந்திருக்கிறது. அது தான் அவர்களுக்கு புரிந்திருக்கிறது. இது அவர்களின் உள்நோக்கத்தை காட்டுகிறது.
கேள்வியை தவிர்க்க தமிழ் தெரிந்தும் இந்தியில் பேசும் நபரை ஒரு வழக்கை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி எப்படி கையாள முடியும்?. இது சினிமாவுக்கு, காட்சியை சுவாராஸ்யப்படுத்த தேவையான ஒன்று. அது மட்டும் இல்லை இது போன்ற காட்சிகள் நிறைய தமிழ் படங்களில் இடம்பெற்றுள்ளது. ஜெய்பீம் படத்தில் பிரகாஷ் ராஜ் அறைந்ததால் சிலருக்கு அந்த காட்சி கடுப்பாக இருக்கிறது. அவர்களின் குட்டு உடைந்துவிட்டது.
பழங்குடியின மக்களின் துயரம் அவர்களை வேதனை அடைய செய்யவில்லை என்றால், நான் சொல்வதெல்லாம், உனக்கு அவ்வளவுதான் புரிஞ்சுதாடா, நீ தானா அவன்?. இது போன்ற ஆட்களிடம் பேசி பலனில்லை” என்று கூறியுள்ளார்.
**-இராமானுஜம்**
.�,