Wமதுவை விளம்பரப்படுத்தும் நடிகை!

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் அறிமுகமாகி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறவர் பூஜா ஹெக்டே. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று வந்த பூஜா ஹெக்டே, விதவிதமான பிகினி உடையில் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனால் லட்சக் கணக்கானவர்கள் இவரை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்கிறார்கள்.

சமீபகாலமாக மது நிறுவனங்கள் நடிகர், நடிகைகளை கொண்டு அவர்களது சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் செய்து வருகிறது. இதற்காக அவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே காஜல் அகர்வால் உள்ளிட்ட சில நடிகைகள் இதுபோன்று விளம்பரப்படுத்தினர். இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்போது பூஜா ஹெக்டே ஒரு பிரபல நிறுவனத்தின் மதுவை ஒரு கிளாசில் ஊற்றி அதில் ஐஸ், சோடா கலந்து வைத்து விட்டு கவர்ச்சி உடையில் குதூகல ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட, ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள். பணத்துக்காக மது குடிப்பதை ஊக்கப்படுத்தலாமா என்று பலர் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share