அஜித்துக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

Published On:

| By Balaji

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு அஜித் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘வலிமை’. கொரோனா சூழல் காரணமாக இரண்டு வருடம் படப்பிடிப்பு, வெளியீடு என அனைத்தும் தள்ளி போனது. இறுதியில் இந்த மாதம் பொங்கல் விடுமுறை தினத்தை ஒட்டி 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்து சூழல் மீண்டும் சிக்கலாக எதிர்பாராத விதமாக மீண்டும் ‘வலிமை’ திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்கு பிறகு ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தனது 61வது படத்தில் மீண்டும் அஜித் இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு முன்பே வெளியானது.

தற்போது ‘வலிமை’ படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் ‘அஜித்61’ படத்திற்கான வேலைகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. ‘மங்காத்தா’, ‘பில்லா’ போன்ற நெகட்டிவ் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என ஹெச். வினோத் முன்பு பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். கோவிட் சூழல் சரியாகும் நிலையில் திட்டமிட்டபடி பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில்தான் ‘அஜித் 61’ நாயகி குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித்திற்கு ஜோடியாக நடிக்க தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

தமிழில் தற்போது விஜய்யுடன் ஜோடியாக ‘பீஸ்ட்’ டில் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸூடன் இவர் நடித்த ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் கோவிட் காரணமாக வெளியீடு தள்ளி போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share