mபொன்னியின் செல்வன் படக்குழுவில் கொரோனா?

entertainment

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியை தொடங்கியவர்கள், எல்லோரும் அதனை தொடர முடியாமல் பின்வாங்கியதாகத்தான் வரலாற்று தகவல்கள் இருக்கிறது

அதே போன்று மருதநாயகம் வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியை தொடங்கிய கமல்ஹாசன் நிதி நெருக்கடி காரணமாக அம்முயற்சியை ஒத்திவைத்தார்

நிதிவசதி, ஆளுமைமிக்க இயக்குநர், கதைக்கு தேவையான முன்ணணி நட்சத்திரங்கள் ஈகோ பார்க்காமல் நடிக்க ஒப்புக் கொண்டது என்கிற சாதகமானஅம்சங்கள் நிரம்பிய பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பு தொடக்கம் முதலே இயற்கை ஏற்படுத்திய தடைகளை எதிர்கொண்டு வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் இப் படத்தைலைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கியது. அதன்பின் பல தடைகள் சிக்கல்களைத்தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்டது

இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 20 அன்று புதுச்சேரியில் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கியதுமே சிக்கலும் தொடங்கிவிட்டது. சுமார் முன்னூறு பேர் கொண்ட படக்குழுவில் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே சுமார் 26 பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டு அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகச் தகவல் கிடைத்துள்ளது

குறிப்பாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே நடந்த அரங்கம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததென்றும் அது அப்படியே மற்றவர்களுக்கும் பரவியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் படக்குழுவுக்குள் பதட்டம் இருந்தாலும் மூன்றாவது அலை வருவதற்குள் முதல்பாகத்தை நிறைவு செய்யவேண்டுமென்பதற்காக வேகவேகமாகப் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *