I
மணிரத்னத்தின் கனவுத் திட்டம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது.
கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியது. அதன்பிறகு, சென்னை & பாண்டிச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அதன்பிறகு கொரோனாவினால் துவங்காமல் இருந்த படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான மூன்று செட்களில் துவங்கி, வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு குறித்த புதிய தகவலொன்றும் கிடைத்துள்ளது. அதாவது, பொன்னியின் செல்வனின் அடுத்த ஷெட்யூல் ஜெய்ப்பூர் பகுதியில் துவங்க இருக்கிறது. ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்க இருக்காம். ஜெய்ப்பூரிலும் ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு.
லைகா நிறுவனத்துடன் இணைந்து படத்தைத் தயாரித்துவருகிறார் மணிரத்னம். 500 கோடி பட்ஜெட்டில் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்த காட்சிகளுக்கு கிராஃபிக்ஸ் & எடிட்டிங் பணிகளை ஒரு பக்கம் ஆரம்பித்துவிட்டார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தை அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
**- தீரன்**
�,