விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மணிமேகலை 2 தினங்களுக்கு முன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். எல்லாவற்றிலும் மேலானது சுய மரியாதை முக்கியம் என்றும் இந்த சீசனில் குக்காக வந்த ஒரு பெண் அவர் வேலையை மறந்து ஆங்கர் போல் செயல்படுகிறார். என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் வேலையில் அவர் குறுக்கிடுகிறார் என்றும் மணிமேகலை கூறியிருந்தார்.
மணிமேகலை குறிப்பிடுவது தொகுப்பாளரும், குக் வித் கோமாளியில் குக்காக இருக்கும் பிரியங்காவைதான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மணிமேகலை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தனது குமுறல்களை கொட்டியுள்ளார். அதில், ”என்னை பற்றி பலரும் பலவிதமாக கருத்து கூறுகின்றனர். ஆரம்பத்தில் நானும் என்னுடைய கணவர் உசேனும் கல்யாணம் செய்ததும் லவ் ஜிகாத் என்றனர்.
இந்த திருமணம் அதிக நாட்கள் நிலைக்காது மணிமேகலை முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடுவார் என்றும் பரப்பினர். ஆனால் என்னுடைய கணவர் என்னை மதம் மாற்ற முயற்சி செய்யவே இல்லை. எனக்கு எல்லா கடவுளும் ஒன்று என்பதால் நான் மசூதிக்கு போவேன் . அதுபோல அதிகமாக கோவிலுக்கும் போவேன். எனக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் கணவர் கொடுக்கும் நம்பிக்கையால்தான் மீள்கிறேன்.
ஆரம்பத்தில் எங்கள் திருமண வாழ்க்கை நான்கு மாதத்தில் முடிந்துவிடும் என்று சிலர் சொன்னார்கள். அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதே கிடையாது. சொல்றவங்க என்னவோ சொல்லிட்டு போங்க நாங்க எங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். ஆனால் ப்ளீஸ் நடக்காத விஷயங்களை பரப்பாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
திருமணமான 40 நாளில் 6 முறை மட்டுமே குளித்த கணவர்… நாற்றம் தாங்காமல் மனைவி செய்த சம்பவம்!
டெல்லி புதிய முதலமைச்சர் ஆகிறார் அதிஷி